தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ஆசிரியர் கல்விக்கழகங்களிலும் கலப்புமுறையில் விரிவுரைகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நவம்பர் 9 முதல் 12ஆம் தேதி வரை ஏ பிரிவு மாநிலங்களிலும், நவம்பர் 10 முதல் 13ஆம் தேதி வரை பி பிரிவு மாநிலங்களிலும் இணையவழி மற்றும் நேரடி வகுப்புகள் நடத்தப்படலாம்.
தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குத் திரும்பும் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், இணையவழியில் விரிவுரைகளில் பங்கேற்க இந்த ஏற்பாடு உதவும் என அவர் கூறினார்.
மேலும், தேவைக்கேற்ப கூடுதல் விடுமுறை மற்றும் மாற்று விடுமுறைக்கும் ஆசிரியர் கல்விக்கழகங்கள் விண்ணப்பிக்கலாம் என்றார்.
குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவதற்கான வாய்ப்பை வழங்குவதோடு, கற்றல் நடவடிக்கைகளும் தொடர்ந்து சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என ஃபாட்லீனா தெரிவித்தார்.








