கிளந்தான், கோத்தா பாருவில் 394 ரிங்கிட் மதிப்பிலான மளிகைப் பொருட்கள், குழந்தைகளுக்கான பால் மாவு உள்ளிட்ட பொருட்களைத் திருடிய ஐந்து பிள்ளைகளின் தந்தைக்கு ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
43 வயதான வான் எஸ்கண்டார் வான் ஜுலிஹி, கடந்த அக்டோபர் 11ஆம் தேதி பல்பொருள் அங்காடி ஒன்றிலிருந்து 12 பொட்டலங்கள் குழந்தைப் பால் மாவு, ஒன்பது பொட்டலங்கள் மைலோ, உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றைத் திருடியதாக ஒப்புக் கொண்டார்.
ஏற்கெனவே மோசடிக் குற்றத்திற்காகச் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளதால், மீண்டும் குற்றம் செய்யாமல் தடுக்கக் கடுமையான தண்டனை அவசியம் என்று மாஜிஸ்திரேட் ஆர் வினோஷன் குறிப்பிட்டார். குற்றவியல் சட்டத்தின் 380ஆவது பிரிவின் கீழ் அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.








