Jun 9, 2026
Thisaigal NewsYouTube
கிழக்கு மலேசியப் பயணிகளுக்கு நற்செய்தி: மலேசியா ஏர்லைன்ஸ், ஃபயர்ஃபிளை சிறப்பு மானியக் கட்டணம் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

கிழக்கு மலேசியப் பயணிகளுக்கு நற்செய்தி: மலேசியா ஏர்லைன்ஸ், ஃபயர்ஃபிளை சிறப்பு மானியக் கட்டணம் அறிவிப்பு

Share:

கிழக்கு மலேசியாவிற்குச் செல்லும் விமானப் பயணிகளுக்கு வரவிருக்கும் ஐடில்அதா, காமத்தான் மற்றும் காவாய் பண்டிகைகளை முன்னிட்டு, மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் ஃபயர்ஃபிளை நிறுவனங்கள் சிறப்பு மானிய சலுகைக் கட்டணங்களை இன்று முதல் வழங்குகின்றன.

அரசாங்கத்தின், இப்பண்டிகைக்கால பயணத் திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட கிழக்கு மலேசிய வழித்தடங்களுக்கான ஒரு வழிப் பயணக் கட்டணம் அதிகபட்சமாக 499 ரிங்கிட் ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இச்சலுகை விலையிலான டிக்கெட்டுகள் வரும் மே 31 ஆம் தேதி வரை மட்டுமே விற்பனை செய்யப்படும்.

பயணிகளின் வசதிக்காக, கோத்தா பாரு, லாபுவான், தாவாவ், சண்டாக்கான், கூச்சிங், சிபு மற்றும் மிரி ஆகிய நகரங்களுக்கு இடையே கூடுதலாக 62 விமானங்கள் இயக்கப்படவுள்ளன. ஃபயர்ஃபிளை நிறுவனம் கே.எல்.ஐ.ஏ டெர்மினல் 1 மற்றும் சுபாங் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையம் ஆகிய இரண்டில் இருந்தும் தனது சேவைகளை வழங்குகிறது.

Related News

கிழக்கு மலேசியப் பயணிகளுக்கு நற்செய்தி: மலேசியா ஏர்லைன்ஸ்... | Thisaigal News