Dec 4, 2025
Thisaigal NewsYouTube
அந்த மருத்துவர் குற்றஞ்சாட்டப்படாதது ஏன்?
தற்போதைய செய்திகள்

அந்த மருத்துவர் குற்றஞ்சாட்டப்படாதது ஏன்?

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை.24-

தனது கிளினிக்கிற்கு வரும் பெண்களை மானபங்கம் செய்ததாகக் கூறப்படும் பினாங்கைத் தளமாகக் கொண்ட ஒரு மருத்துவர், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் நான்கு முறை கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு இருந்த போதிலும் அவர் இன்னமும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றஞ்சாட்டப்படாதது ஏன் என்று மகளின் அமைப்பு ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.

சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு எதிராக பரவலான போலீஸ் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த மருத்துவர், இன்னமும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது ஏன் என்று டபள்யுசிசி எனப்படும் மாற்றத்திற்கான மகளிர் மையம் கேள்வி எழுப்பியுள்ளது. பாயான் பாருவில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கில் ஆகக் கடைசியாக இம்மாதம் முற்பகுதியில் ஒரு பெண்ணை மானபங்கம் செய்ததற்காக அந்த மருத்துவர் கைது செய்யப்பட்டதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.

போலீசார் அளித்த தகவலின்படி கடந்த ஜுன் 29 ஆம் தேதி வயிற்று வலிக்காக அந்த கிளினிக்கிற்குச் சென்ற மாது ஒருவரைப் பரிசோதனை என்ற பெயரில் ஆடை களையச் செய்து, அந்த மருத்துவர் சில்மிஷம் செய்து இருப்பதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த மகளிர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Related News