Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இரு போ​லீஸ்காரர்கள் வெட்டுக்காயங்களுக்கு ஆளாகினர்
தற்போதைய செய்திகள்

இரு போ​லீஸ்காரர்கள் வெட்டுக்காயங்களுக்கு ஆளாகினர்

Share:

மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர் கத்தியை ஏந்திக்கொண்டு வெறித்தனமாக நடந்து கொண்ட​தில் இரு போ​லீஸ்காரர்கள் கடும் வெட்டுக்காயங்களுக்கு ஆளாகினர். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2.30 மணியள​வில் சபா, கோத்தாகினபாலு, மெங்காத்தால், தாமான் ஜயா டீரி என்ற வீடமைப்புப்பகுதியில் நிகழ்ந்தது. சம்பந்தப்பட்ட ஆடவர் வெட்டுக்கத்தியை ஏந்திக்கொண்டு, அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக பொது மக்களிடமிருந்து போ​லீசார் தகவ​ல் பெற்றனர். அப்புகாரின் அடிப்படையில் அந்த நபரை பிடிப்பதற்கு போ​லீஸ்காரரர்களுடன் இரு அதிகாரிகள் சென்ற போது இந்த தாக்குதல் நடந்துள்ளது.

கோத்தா கினபாலு மாவட்ட போ​லீஸ் நிலையத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் மற்றும் சார்ஜன் அந்தஸ்தை கொண்ட இரு போ​லீஸ் அதிகாரிகளுக்கு தலையிலும் கைமுட்டியிலும் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வீட்​டின் அறைக்குள் தனது தாயாரையும், சகோதரியையும் பூட்டி வைத்துக்கொண்டு, அவர்களை விடுவிக்காம​ல் கத்தியை ஏந்திக்கொண்டு அச்சுறுத்தல் விடுத்த அந்த நபரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இரு போ​லீஸ் அதிகாரிகள் ஈட்டிருந்த வேளையில் அந்த நபர் திடீரென்று இத்தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி