Sep 16, 2026
Thisaigal NewsYouTube
பிந்துலு துறைமுகம் சரவாக் அரசாங்கத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

பிந்துலு துறைமுகம் சரவாக் அரசாங்கத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது

Share:

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பிந்துலு துறைமுகம், சரவாக் மாநில அரசிடம் அதிகாரப்பூர்வமாக இன்று புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரி துன் ஓபேங் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஒப்படைப்பு நிகழ்வு, துறைமுக நிர்வாகத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

2026 -ஆம் ஆண்டு மலேசிய தினத்தின் தேசிய அளவிலான கொண்டாட்டங்களை சரவாக் மாநிலத்தில் நடத்தும் நாளிலேயே இந்த ஒப்படைப்பு நிகழ்வானது நடைபெற்றது.

இன்று கூச்சிங் அனைத்துலக விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அரசின் சார்பில் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், சரவாக் அரசின் சார்பில் துணை முதலமைச்சர் டக்லஸ் உங்கா எம்பாஸ் ஆகியோர் ஆவணங்களைப் பரிமாறிக் கொண்டனர்.

கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி சட்டப்பிரிவு 858 மற்றும் 859 அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, பிந்துலு துறைமுகம் மத்திய அரசின் துறைமுகம் என்ற நிலையிலிருந்து, சரவாக் அரசின் அதிகார வரம்புக்குட்பட்ட மாநில துறைமுகமாக அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளதாக சரவாக் உள்கட்டமைப்பு மற்றும் துறைமுக மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு – மேலும் 2 பேரைத் தேடும் பணி தீவிரம்

மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு – மேலும் 2 பேரைத் தேடும் பணி தீவிரம்

2030-ஆம் ஆண்டிற்குள் 4-ஆவது படைப்பிரிவாக சைபர் படை உருவாக்கப்படும் - மலேசிய ஆயுதப்படை தகவல்

2030-ஆம் ஆண்டிற்குள் 4-ஆவது படைப்பிரிவாக சைபர் படை உருவாக்கப்படும் - மலேசிய ஆயுதப்படை தகவல்

பழுதாகி நின்ற கார் மீது லோரி மோதல்: ஒருவர் பலி, இருவர் படுகாயம்

பழுதாகி நின்ற கார் மீது லோரி மோதல்: ஒருவர் பலி, இருவர் படுகாயம்

செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தில் 1 லட்சம் மலேசியர்களுக்கு பயிற்சியளிக்க இலக்கு: அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தில் 1 லட்சம் மலேசியர்களுக்கு பயிற்சியளிக்க இலக்கு: அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

பேராவில் உறைவிடப் பள்ளியில் இன்ஃப்ளூயன்சா பாதிப்பு: 46 மாணவர்களுக்கு அறிகுறிகள் கண்டது

பேராவில் உறைவிடப் பள்ளியில் இன்ஃப்ளூயன்சா பாதிப்பு: 46 மாணவர்களுக்கு அறிகுறிகள் கண்டது

2 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்ப முடிவு - மியான்மர் அதிபரை மலேசியா அழைக்கிறார் அன்வார்

2 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்ப முடிவு - மியான்மர் அதிபரை மலேசியா அழைக்கிறார் அன்வார்