கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போன மீன்பிடி ஆர்வலர்கள் மூவரில் ஒருவர், பேராக் ஹூத்தான் மெலிந்தாங் கடற்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீனவர்கள் சிலர் காலை 8.30 மணியளவில் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்டு மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சடலம் 43 வயதான முஹமட் ஷாரில் அப்துல் ரஹ்மான் என்பது உறவினர்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அச்சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக ஷா ஆலாம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட உள்ளது.
இதனிடையே, காணாமல் போன மேலும் இருவரைத் தேடும் பணியில் போலீசார், மலேசிய கடல்சார் அமலாக்க முகமை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, உள்நாட்டு தற்காப்பு படையினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் உதவியுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே காணாமல் போன 7 மீன்பிடி ஆர்வலர்களில் 4 பேர் நேற்று செகின்சான் கடற்பகுதியில் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை கிள்ளான், சுங்கை காப்பார் பகுதியில் உள்ள செமெந்தா படகுக் குழாமில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற போது மாயமாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.








