மக்கள் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவை தங்களது வாழ்க்கை மற்றும் தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் வகையில், விழிப்புணர்வு, அணுகல் வசதி மற்றும் முறையான பயிற்சி அவசியம் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

‘ஏஐ உந்துக் ரக்யாட்’ எனப்படும் ‘மக்களுக்கான செயற்கை நுண்ணறிவு’ திட்டத்தில் 1 லட்சம் மலேசியர்கள் பங்கேற்க ஊக்குவிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மலேசிய தினத்தையொட்டி டாமன்சாரா தொகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கோபிந்த் சிங் டியோ, மலேசியாவின் 69 ஆண்டுகால பயணத்தில் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் முக்கிய பங்கு வகித்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கான நிதியுதவியை அரசாங்கம் 2,500 ரிங்கிட்டில் இருந்து 10 ஆயிரம் ஆக உயர்த்தியதாகவும், மசூதிக்கு 71 ஆயிரம் ரிங்கிட், காப்பாற்ற பள்ளியின் பணிகளுக்காக 65 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, டாமன்சாரா மற்றும் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதிகளில் 223 மற்றும் 222 பகுதிகளின் வெள்ளப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண 44 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

மேலும் இந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்படும், மேற்கொள்ளப்படவுள்ள குறுகிய மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் குறித்த முழுமையான விவரங்களை விரைவில் செய்தியறிக்கை மூலம் வெளியிட உள்ளதாகவும் அவர் கூறினார்.








