Sep 16, 2026
Thisaigal NewsYouTube
பேராவில் உறைவிடப் பள்ளியில் இன்ஃப்ளூயன்சா பாதிப்பு: 46 மாணவர்களுக்கு அறிகுறிகள் கண்டது
தற்போதைய செய்திகள்

பேராவில் உறைவிடப் பள்ளியில் இன்ஃப்ளூயன்சா பாதிப்பு: 46 மாணவர்களுக்கு அறிகுறிகள் கண்டது

Share:

பேராக் மாநிலத்தில் உள்ள உறைவிடப் பள்ளி ஒன்றில் இன்ஃபுளுவென்ஸா ஏ பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள 46 மாணவர்களுக்கு இன்ஃபுளுவென்ஸா போன்ற நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி வரை, அறிகுறிகளுடன் இருந்த 61 மாணவர்களுக்கு சுகாதார அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டதாக பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன் தெரிவித்தார்.

இதில் 14 பேருக்கு மேல் சுவாசக் குழாய் தொற்றும், ஒருவருக்கு கண் அழற்சியும் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

இதனிடையே, அனைத்து மாணவர்களின் உடல்நிலையும் சீராக இருப்பதாகத் தெரிவித்த சிவநேசன், புதிய பாதிப்புகள் மற்றும் ஆய்வகப் பரிசோதனை முடிவுகளை சுகாதாரத் துறை தொடர்ந்து கண்காணிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அறிகுறிகள் உள்ள மாணவர்கள் முழுமையாக குணமடையும் வரை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும், அறிகுறிகள் நீடித்தாலோ மோசமடைந்தாலோ மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லுமாறும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், தடுப்பூசி வழங்கும் சுகாதார நிலையங்களில் இன்ஃபுளுவென்ஸா தடுப்பூசி செலுத்திக் கொள்வதையும் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Related News