Sep 16, 2026
Thisaigal NewsYouTube
கேஎல்ஐஏவில் இ-ஹெய்லிங் வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் 2 ரிங்கிட்டாகக் குறைப்பு
தற்போதைய செய்திகள்

கேஎல்ஐஏவில் இ-ஹெய்லிங் வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் 2 ரிங்கிட்டாகக் குறைப்பு

Share:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இ-ஹெய்லிங் வாகனங்கள் நுழைவதற்கான கட்டணம், இன்று செப்டம்பர் 16 -ஆம் தேதி முதல் 2 ரிங்கிட் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணமானது வரி உட்பட, 1 மற்றும் 2 ஆகிய இரு முனையங்களிலும் ஒரே மாதிரியாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கேஎல்ஐஏ பயணிகள் அனுபவப் பிரிவின் மூத்த பொது மேலாளர் அப்துல் ஹஸ்மான் அப்துல் முஹிமின் கூறுகையில், முனையம் 1-ல் இதுவரை 3 ரிங்கிட்டும், முனையம் 2-ல் 2 ரிங்கிட்16 காசுகளும் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இரு முனையங்களிலும் 2 ரிங்கிட் என கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்தக் கட்டண ஒருமைப்படுத்தல் மூலம் பயணிகள் மற்றும் இ-ஹெய்லிங் சேவை இயக்குநர்களுக்கு தெளிவான, ஒரே மாதிரியான கட்டண நடைமுறை கிடைப்பதுடன், இரு முனையங்களிலும் பயணிகளை அழைத்துச் செல்லும் நடைமுறையும் மேலும் சீராகும் என மலேசியா ஏர்போட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News

நாட்டின் நலனை முன்னிருத்தி மனசாட்சியுடன் கருத்துத் தெரிவித்தேன்: நஜிப் மன்னிப்பு மனு குறித்து அமைச்சர் ஹன்னா இயோ தகவல்

நாட்டின் நலனை முன்னிருத்தி மனசாட்சியுடன் கருத்துத் தெரிவித்தேன்: நஜிப் மன்னிப்பு மனு குறித்து அமைச்சர் ஹன்னா இயோ தகவல்

3 வாகனங்கள் மீது கார் மோதல்: ஓட்டுநரின் சிறுநீர் பரிசோதனையில் அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

3 வாகனங்கள் மீது கார் மோதல்: ஓட்டுநரின் சிறுநீர் பரிசோதனையில் அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

மலேசிய வழித்தடத்தில் இஸ்ரேலிய இராணுவப் பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம்  - அன்வார் திட்டவட்டம்

மலேசிய வழித்தடத்தில் இஸ்ரேலிய இராணுவப் பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் - அன்வார் திட்டவட்டம்

சிப்பாங்கில் அதிரடி சோதனை: 173 சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

சிப்பாங்கில் அதிரடி சோதனை: 173 சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

இசை நிகழ்ச்சிகளை நடத்துவதில் கோலாலம்பூர் சிங்கப்பூருடன் போட்டியிட வேண்டும்: அமைச்சர் ஹன்னா இயோ

இசை நிகழ்ச்சிகளை நடத்துவதில் கோலாலம்பூர் சிங்கப்பூருடன் போட்டியிட வேண்டும்: அமைச்சர் ஹன்னா இயோ

அனைத்து மலேசியர்களுக்கும் மாமன்னர், பேரரசியார் மலேசிய தின வாழ்த்து

அனைத்து மலேசியர்களுக்கும் மாமன்னர், பேரரசியார் மலேசிய தின வாழ்த்து