Sep 16, 2026
Thisaigal NewsYouTube
சிப்பாங்கில் அதிரடி சோதனை: 173 சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது
தற்போதைய செய்திகள்

சிப்பாங்கில் அதிரடி சோதனை: 173 சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

Share:

சிப்பாங் பகுதியில் விமான நிலைய கட்டுமானத் தளம், கிடங்குகள் மற்றும் விமான இன்ஜின் சோதனை நிலையங்களில் குடிநுழைவுத் துறையினர் நடத்திய சோதனையில் 173 ஆவணமற்ற வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகார்களைத் தொடர்ந்து ஒரு வாரம் உளவு தகவல்கள் சேகரிக்கப்பட்டு, 88 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மொத்தம் 261 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதில், அதில் 217 வெளிநாட்டினரும் 44 மலேசியர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட 173 வெளிநாட்டினரில் 147 பேர் வங்காள தேச நாட்டைச் சேர்ந்த ஆண்கள், 17 பேர் இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த ஆண்கள், 9 பேர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆண்கள் என குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், கட்டுமான நிறுவனங்களின் துணை நிறுவனங்கள் மூலம் பணியமர்த்தப்பட்ட சில வெளிநாட்டினர், வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக வேலை அனுமதிச் சீட்டுகளைப் பயன்படுத்தியதும், சமூகப் பயண அனுமதிச் சீட்டுகளை தவறாகப் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உதவும் வகையில் 5 மலேசியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

Related News

கேஎல்ஐஏவில் இ-ஹெய்லிங் வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் 2 ரிங்கிட்டாகக் குறைப்பு

கேஎல்ஐஏவில் இ-ஹெய்லிங் வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் 2 ரிங்கிட்டாகக் குறைப்பு

நாட்டின் நலனை முன்னிருத்தி மனசாட்சியுடன் கருத்துத் தெரிவித்தேன்: நஜிப் மன்னிப்பு மனு குறித்து அமைச்சர் ஹன்னா இயோ தகவல்

நாட்டின் நலனை முன்னிருத்தி மனசாட்சியுடன் கருத்துத் தெரிவித்தேன்: நஜிப் மன்னிப்பு மனு குறித்து அமைச்சர் ஹன்னா இயோ தகவல்

3 வாகனங்கள் மீது கார் மோதல்: ஓட்டுநரின் சிறுநீர் பரிசோதனையில் அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

3 வாகனங்கள் மீது கார் மோதல்: ஓட்டுநரின் சிறுநீர் பரிசோதனையில் அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

மலேசிய வழித்தடத்தில் இஸ்ரேலிய இராணுவப் பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம்  - அன்வார் திட்டவட்டம்

மலேசிய வழித்தடத்தில் இஸ்ரேலிய இராணுவப் பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் - அன்வார் திட்டவட்டம்

இசை நிகழ்ச்சிகளை நடத்துவதில் கோலாலம்பூர் சிங்கப்பூருடன் போட்டியிட வேண்டும்: அமைச்சர் ஹன்னா இயோ

இசை நிகழ்ச்சிகளை நடத்துவதில் கோலாலம்பூர் சிங்கப்பூருடன் போட்டியிட வேண்டும்: அமைச்சர் ஹன்னா இயோ

அனைத்து மலேசியர்களுக்கும் மாமன்னர், பேரரசியார் மலேசிய தின வாழ்த்து

அனைத்து மலேசியர்களுக்கும் மாமன்னர், பேரரசியார் மலேசிய தின வாழ்த்து