Sep 16, 2026
Thisaigal NewsYouTube
நாட்டின் நலனை முன்னிருத்தி மனசாட்சியுடன் கருத்துத் தெரிவித்தேன்: நஜிப் மன்னிப்பு மனு குறித்து அமைச்சர் ஹன்னா இயோ தகவல்
தற்போதைய செய்திகள்

நாட்டின் நலனை முன்னிருத்தி மனசாட்சியுடன் கருத்துத் தெரிவித்தேன்: நஜிப் மன்னிப்பு மனு குறித்து அமைச்சர் ஹன்னா இயோ தகவல்

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கின் பொதுமன்னிப்பு கோரும் மனு தொடர்பாக, மன்னிப்பு வாரிய உறுப்பினர் என்ற முறையில் தாம் நேர்மையாகவும், மனசாட்சியின் அடிப்படையிலும் தனது கருத்தை தெரிவித்ததாக பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா கூறியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெற்ற மன்னிப்பு வாரியக் கூட்டத்தில், அட்டர்னி ஜெனரலின் எழுத்துப்பூர்வ கருத்தை பரிசீலித்த பின்னர், நாட்டின் நலனை கருத்தில் கொண்டு தமது நிலைப்பாட்டை தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 42-ன் கீழ் மன்னிப்பு வழங்குவது தொடர்பான இறுதி அதிகாரமும் முடிவும் மாட்சிமை தங்கிய மாமன்னருக்கே உரியது என்றும் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நஜிப்பின் மன்னிப்பு மனு தொடர்பான விளக்கங்களை ஹன்னா இயோவிடம் கேட்க வேண்டும் என்றும், தமது அமைச்சு பொதுமன்னிப்பு செயலலகமாக மட்டுமே செயல்படுவதாகவும் சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் கூறியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெற்ற மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் நஜிப்பின் மன்னிப்பு மனுவை எதிர்கால கூட்டத்துக்கு ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.

தற்போது காஜாங் சிறைச்சாலையில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் நஜிப், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்துக்குச் சொந்தமான 42 மில்லியன் ரிங்கிட்டை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர்.

கடந்த 2024-ஆம் ஆண்டு அவரது 12 ஆண்டு சிறைத்தண்டனை ஆறு ஆண்டுகளாகவும், 210 மில்லியன் ரிங்கிட் அபராதமானது, 50 மில்லியனாகவும் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News

கேஎல்ஐஏவில் இ-ஹெய்லிங் வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் 2 ரிங்கிட்டாகக் குறைப்பு

கேஎல்ஐஏவில் இ-ஹெய்லிங் வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் 2 ரிங்கிட்டாகக் குறைப்பு

3 வாகனங்கள் மீது கார் மோதல்: ஓட்டுநரின் சிறுநீர் பரிசோதனையில் அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

3 வாகனங்கள் மீது கார் மோதல்: ஓட்டுநரின் சிறுநீர் பரிசோதனையில் அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

மலேசிய வழித்தடத்தில் இஸ்ரேலிய இராணுவப் பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம்  - அன்வார் திட்டவட்டம்

மலேசிய வழித்தடத்தில் இஸ்ரேலிய இராணுவப் பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் - அன்வார் திட்டவட்டம்

சிப்பாங்கில் அதிரடி சோதனை: 173 சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

சிப்பாங்கில் அதிரடி சோதனை: 173 சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

இசை நிகழ்ச்சிகளை நடத்துவதில் கோலாலம்பூர் சிங்கப்பூருடன் போட்டியிட வேண்டும்: அமைச்சர் ஹன்னா இயோ

இசை நிகழ்ச்சிகளை நடத்துவதில் கோலாலம்பூர் சிங்கப்பூருடன் போட்டியிட வேண்டும்: அமைச்சர் ஹன்னா இயோ

அனைத்து மலேசியர்களுக்கும் மாமன்னர், பேரரசியார் மலேசிய தின வாழ்த்து

அனைத்து மலேசியர்களுக்கும் மாமன்னர், பேரரசியார் மலேசிய தின வாழ்த்து