கோலாலம்பூர், டிசம்பர்.24-
சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய நிலையில் 21 இடங்களில் நடத்தப்பட்ட சோனையில் 85 நபர்கள் பிடிபட்டனர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
இவற்றில் 20 சூதாட்ட மையங்கள், சூதாட்ட அகப்பக்கத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் அழைப்பு மையங்களாக செயல்பட்டுள்ளன. இதர சூதாட்ட மையங்கள், இல்லாத முதலீட்டுத் திட்டத்திற்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று டத்தோ குமார் குறிப்பிட்டார்.
உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட வெளிநாட்டுவர்களையும் இலக்காகக் கொண்டு இந்த மையங்கள் செயல்பட்டு வந்துள்ளனர்.
பிடிபட்ட 85 பேரில் 62 பேர் ஆண்கள் என்றும், 23 பேர் பெண்கள் என்றும் டத்தோ குமார் குறிப்பிட்டார்.








