தமது 18 வயது மகன் மிகக் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 நபர்கள் நீதியின் பிடியிலிருந்து தப்பித்து இருப்பது குறித்து நவீனின் தாயார் D SHAANTHI தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி இருப்பதுடன் நீதிமன்றத்துக்கு வெளியே துயரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கதறி அழுதார்.
தமது மகனுக்கு நீதி கிடைக்கும் என்று கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாகக் காத்திருந்த நிலையில் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது என்று சாந்தி தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
பினாங்கு புக்கிட் குளுகோரைச் சேர்ந்த ஆறாம் படிவ மாவணான நவீன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஐவரை பினாங்கு உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
30 வயது எஸ்.கோபிநாத், 22 வயது ஜெ, ராகசுதன், 22 வயது கோகுலன் மற்றும் பதின்ம வயதுடைய மேலும் இரண்டு இந்திய இளைஞர்களை கொலைக் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
தம் மகன் நவீனுக்கு நீதி கிடைக்கவில்லை என்றபோதிலும் கடவுள் தண்டிப்பார் என்று கண்ணீர் மல்க சாந்தி குறிப்பிட்டார் டி சாந்தி.
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவர் மீதான விசாரணையில் அடிப்படை முகாந்திரங்களை நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு தோல்வி கண்டிருப்பதாக நீதிபதி ரட்சி அமிட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.








