ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.06-
தனது சொந்த குடும்பத்தினரே தன்னைக் கொலை செய்ய முயற்சி செய்வதாகக் கூறி, ஓர் இந்திய ஆடவர் அழுதவாறு பொதுமக்களிடம் உதவிக் கேட்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ஓடும் ரயிலில் பயணிகள் மத்தியில், தனது குடும்பத்தினருக்கு எதிராகத் தாம் அளித்துள்ளதாகக் கூறப்படும் போலீஸ் புகார் அறிக்கையைக் காட்டி, தன்னை எப்படியாவது காப்பாற்றும்படி அந்த ஆடவர் மன்றாடும் காட்சி, வலைவாசிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது பெயரில் காப்புறுதி பாலிசி எடுத்த பின்னர் இன்சுரன்ஸ் பணத்துக்காகத் தனது சொந்த அண்ணனே தன்னைக் கொலை செய்வதற்கு கையாட்களை ஏவி விட்டுள்ளதாக அந்த ஆடவர் குற்றஞ்சாட்டுகிறார்.
ஜோகூர் பாருவில் நிகழ்ந்ததாக நம்பப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் போலீஸ் புகார் பெறப்பட்டுள்ளதா? என்பது குறித்து இன்று மாலை வரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.








