Aug 7, 2026
Thisaigal NewsYouTube
கெரிக்கில் கார் கண்ணாடி உடைப்பு: இரு சிறுவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

கெரிக்கில் கார் கண்ணாடி உடைப்பு: இரு சிறுவர்கள் கைது

Share:

ஈப்போ, ஜூலை.11-

பேராக் மாநிலம் கெரிக் பகுதியில் தொடர்ச்சியாக கார் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் தொடர்பாக 13 மற்றும் 14 வயதுடைய இரு சிறார்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை பெறப்பட்ட எட்டு புகார்களைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், Taman Sri Temenggor, Taman Meha, Taman Gerik ஆகிய பகுதியில் மூன்று வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்ததில் இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவங்களில் எட்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன், மொத்த இழப்பு 10 ஆயிரம் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கற்கள் மற்றும் செங்கற்களைப் பயன்படுத்தி கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 427-இன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

கெரிக்கில் கார் கண்ணாடி உடைப்பு: இரு சிறுவர்கள் கைது | Thisaigal News