Aug 26, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் தேர்தல்: மலேசியா–சிங்கப்பூர் எல்லைச் சாவடிகளில் போக்குவரத்து சீராக உள்ளது
தற்போதைய செய்திகள்

ஜோகூர் தேர்தல்: மலேசியா–சிங்கப்பூர் எல்லைச் சாவடிகளில் போக்குவரத்து சீராக உள்ளது

Share:

கோலாலம்பூர், ஜூலை.11-

16-ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தலில், 2.6 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ள நிலையில், மலேசியா சிங்கப்பூர் இடையிலான முக்கிய தரைவழி எல்லை நுழைவாயில்களான சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் மற்றும் சுல்தான் அபு பக்கார் வளாகம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் சீராக இருந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் டத்தொ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான AKPS வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது X சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இன்று வாக்குப்பதிவு நாளையொட்டி எல்லைச் சாவடிகளில் வழக்கத்தை விட அதிக மக்கள் நடமாட்டம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், எந்தவித நெரிசலும் பதிவாகவில்லை.

இந்நிலையில், நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News