ஜார்ஜ்டவுன், ஜூலை.11-
பினாங்கு மாநில ஆட்சியாளர் துன் ரம்லி ஙா தாலிப்பின் 85-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி இன்று நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான பினாங்கு மாநில விருதுகள் வழங்கும் விழாவில், தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி பாசில், Darjah Panglima Pangkuan Negeri விருதைப் பெற்று, 'டத்தோ ஸ்ரீ' பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மடானி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளருமான ஃபாஹ்மி பாசில், இவ்வாண்டு DPPN விருதைப் பெற்ற ஒரே நபர் ஆவார்.
இன்று நடைபெற்ற விருதளிக்கும் விழாவில் மொத்தம் 230 பேர் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், 19 பேருக்கு Darjah Gemilang Pangkuan Negeri என்ற DGPN விருது வழங்கப்பட்டு, அவர்களுக்கும் 'டத்தோ ஸ்ரீ' பட்டம் வழங்கப்பட்டது.
அவர்களில் MARA Incorporated Sdn Bhd தலைவர் Datuk Abdul Halim Mohammad மற்றும் Invest Penang தலைமைச் செயல் அதிகாரி Datuk Loo Lee Lian ஆகியோரும் இடம் பெற்றனர்.
அதேவேளையில், 9 பேருக்கு Darjah Yang Mulia Pangkuan என்ற DMPN விருதும், மேலும் 72 பேருக்கு Darjah Setia Pangkuan Negeri என்ற DSPN விருதும் வழங்கப்பட்டது. DSPN விருது பெறுவோருக்கு 'டத்தோ' பட்டம் வழங்கப்படுகின்றது.
இன்று காலை 8.45 மணியளவில், பினாங்கு மாநில ஆட்சியாளர் Tun Ramli Ngah Talib மற்றும் அவரது துணைவி Toh Puan Datuk Raja Noora Ashikin Raja Abdullah நிகழ்வில் கலந்து கொண்டு விழாவைத் தொடக்கி வைத்தனர்.
இன்று தொடங்கிய இந்த மாநில விருதுகள் வழங்கும் விழா, வரும் ஜூலை 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது.
இதில் 101 பேருக்கு மாநில உயரிய விருதுகளும், மேலும் 1,120 பேருக்கு பதக்கங்கள் மற்றும் கௌரவ அலங்காரங்களும் வழங்கப்படவுள்ளன.








