Sep 24, 2026
Thisaigal NewsYouTube
பெட்டாலிங் ஸ்ட்ரீட்டில் போலி உலகக் கோப்பை ஜெர்சிகள் பறிமுதல்: 6 வெளிநாட்டினர் கைது
தற்போதைய செய்திகள்

பெட்டாலிங் ஸ்ட்ரீட்டில் போலி உலகக் கோப்பை ஜெர்சிகள் பறிமுதல்: 6 வெளிநாட்டினர் கைது

Share:

கோலாலம்பூர், ஜூலை.11-

கோலாலம்பூர் பெட்டாலிங் ஸ்ட்ரீட் சந்தையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், 5 ஆயிரத்து 403 போலி உலகக் கோப்பை கால்பந்து ஜெர்சிகளை, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

நேற்று மாலை 6 மணியளவில் ஐந்து கடைகளில் நடத்தப்பட்ட இச்சோதனையின் போது, இந்த விற்பனைச் செயல்பாட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து கோலாலம்பூர் KPDN அமலாக்கப் பிரிவின் தலைவர் Shahran Arshad கூறுகையில், போலி ஜெர்சிகள் உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு 50 ரிங்கிட்டிற்கும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 100 ரிங்கிட்டிற்க்கும் அதிகமான விலைக்கும் விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த போலி பொருட்கள் விற்பனை தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News