Aug 26, 2026
Thisaigal NewsYouTube
டுங்குனில் மளிகைக் கடையில் ஆயுதக் கொள்ளை: மூதாட்டியிடம் கட்டி வைத்து நகை, பணம் பறிப்பு
தற்போதைய செய்திகள்

டுங்குனில் மளிகைக் கடையில் ஆயுதக் கொள்ளை: மூதாட்டியிடம் கட்டி வைத்து நகை, பணம் பறிப்பு

Share:

டுங்குன், ஜூலை.11-

Ketengah Jaya-விலுள்ள மளிகைக் கடையில் தனியாக இருந்த 70 வயதுடைய பெண் கடை உரிமையாளரை, ஆயுதங்களுடன் வந்த மூவர் கட்டிப் போட்டு, நகை, பணம் மற்றும் கைப்பேசிகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இது குறித்து டுங்குன் மாவட்ட போலீஸ் தலைவர் Nik Ab Halim Nik Mat கூறுகையில், நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் அரிவாள் மற்றும் இரும்புக் கம்பியுடன் வந்த சந்தேக நபர்கள், அம்மூதாட்டியின் கைகளை கட்டி, வாயை டேப்பால் ஒட்டிவிட்டு, நகைகள், ரொக்கப் பணம், இரண்டு கைப்பேசிகள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் மூதாட்டிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், ஆயிரக்கணக்கான ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிபோயுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சாம்பல் நிற Proton Iswara காரில் தப்பிச் சென்றதாக நம்பப்படும் மூன்று சந்தேக நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 395/397-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

Related News

குழந்தை விற்பனைக் கும்பல் சிக்கியது; 6 பேர் கைது – கெடா போலீஸ் தலைவர் அதிரடி தகவல்

குழந்தை விற்பனைக் கும்பல் சிக்கியது; 6 பேர் கைது – கெடா போலீஸ் தலைவர் அதிரடி தகவல்

ஆர்சிஐ அறிக்கையை அரசியலாக்க வேண்டாம்; அக்மாலுக்கு கெஅடிலான் இளைஞர் அணி பதிலடி

ஆர்சிஐ அறிக்கையை அரசியலாக்க வேண்டாம்; அக்மாலுக்கு கெஅடிலான் இளைஞர் அணி பதிலடி

சூதாட்டத்திற்கு அனுமதி தந்தால் கெடாவாசிகள் உங்களைச் சபிப்பார்கள் — அன்வாருக்கு சனூசி எச்சரிக்கை

சூதாட்டத்திற்கு அனுமதி தந்தால் கெடாவாசிகள் உங்களைச் சபிப்பார்கள் — அன்வாருக்கு சனூசி எச்சரிக்கை

லாரியைத் தவிர்க்க முயன்ற சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்தது — மூவர் காயம்

லாரியைத் தவிர்க்க முயன்ற சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்தது — மூவர் காயம்

2 லட்சம் ரிங்கிட் சட்டக் கட்டணத்தைத் திருப்பித் தரக் கோரிய வழக்கு விசாரணை தொடரும்

2 லட்சம் ரிங்கிட் சட்டக் கட்டணத்தைத் திருப்பித் தரக் கோரிய வழக்கு விசாரணை தொடரும்

பகாங் மாநில அரசியலில் திடீர் திருப்பம்  / மந்திரி பெசார் வான் ரோஸ்டி -க்கு இரு பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

பகாங் மாநில அரசியலில் திடீர் திருப்பம் / மந்திரி பெசார் வான் ரோஸ்டி -க்கு இரு பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு