கோலகங்சார் நாடாளுமன்றத் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவரான பெர்சத்து கட்சியைச் சேர்ந்த இஸ்கண்டார் டிசுல்கர்னயின் அப்துல் காலிட், திடீரென்று தமது ஆதரவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தெரிவித்துள்ளார் என்றால் அவர் அச்சுறுத்தப்பட்டு இருக்கலாம் என்று பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளர் ஹம்சா சைனுடின் தெரிவித்துள்ளார்.
கோலகங்சார் எம்.பி. இஸ்கண்டார் டிசுல்கர்னயின்னை அணுகிய வர்த்தகர் ஒருவர், பிரதமருக்கு ஆதரவு நல்கினால் பெரும் தொகை கொடுப்பதாக பேரம் பேசியுள்ளார். அதற்கு அவர் உடன்பாடாததைத் தொடர்ந்து, லஞ்சம் பெற்றதாக கூறி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மூலம் அவர் மிரட்டப்பட்டுள்ளார் என்று ஹம்ஸா ஜைனுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related News

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

ஆபாசச் சேட்டை: மூன்று மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கம்


