Sep 14, 2026
Thisaigal NewsYouTube
கம்போங் புங்கையில் சோகம்: கடலில் மூழ்கி தந்தையும் 8 வயது மகனும் பலி
தற்போதைய செய்திகள்

கம்போங் புங்கையில் சோகம்: கடலில் மூழ்கி தந்தையும் 8 வயது மகனும் பலி

Share:

கம்போங் புங்கை கடற்கரையில் நேற்று நீந்திக் கொண்டிருந்த 33 வயது தந்தையும், அவரது 8 வயது மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் 33 வயதான முஹமட் நிஸாம் ஸைனால் மற்றும் அவரது மகன் 8 வயதான முஹமட் ஸம்ரி மிக்காயில் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு சுமார் 7.10 மணியளவில் இச்சம்பவம் தொடர்பாக அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, புங்கை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே பொதுமக்கள் இருவரையும் கரைக்கு மீட்டிருந்தனர். தொடர்ந்து இருவருக்கும் அவசர முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

பின்னர் இருவரும் மேலதிக சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

எனினும், மருத்துவ அதிகாரிகள் இருவரும் உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர்.

Related News