Sep 12, 2026
Thisaigal NewsYouTube
நேபாள பெருவெள்ளம்: உலகின் கவனத்தை ஈர்த்த அந்த 'ஒற்றை வீடு'
தற்போதைய செய்திகள்

நேபாள பெருவெள்ளம்: உலகின் கவனத்தை ஈர்த்த அந்த 'ஒற்றை வீடு'

Share:

நேபாள பெருவெள்ளத்தில், மிகப் பெரிய கட்டிடங்களே நொடிப் பொழுதில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒரே ஒரு மாடி வீடு மட்டும் எந்தவித பாதிப்பும் இன்றி வலுவாக இருக்கும் காணொளி சமூக ஊடகவாசிகள் பலரையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில், அவ்வீட்டைக் கட்டிய பொறியியலாளரை சமூக ஊடகவாசிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக அவ்வீட்டைச் சுற்றியிருந்த மொத்த வீடுகளும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அந்த ஒற்றை வீட்டில் வசிப்பவர்கள் மட்டும் பால்கனியில் நின்று வேடிக்கை பார்க்கும் காணொளி வைரலாகி வருகின்றது.

நீரோட்டம் எந்த திசையில் செல்கிறதோ, அந்த அழுத்தத்தை தாங்கும் வகையில் தூண்கள், சுவர்கள் மிகவும் தரமானதாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நேபாளத்தின் கோஷி ஆற்றில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி காலையில் பெருவெள்ளம் ஏற்பட்டது. அந்த நாட்டின் சீன எல்லையை ஒட்டிய பகுதிகள் முழுவதையும் இந்த பெருவெள்ளமானது மூழ்கடித்தது.

இந்நிலையில், கோஷி ஆற்றின் கிளை நதியான லெண்டேவின் நீரோட்டத்தை பனிச்சரிவு ஒன்று தடுத்ததால் ஏரி உடைந்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 3000-த்திற்கும் மேற்பட்டோரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி