Sep 6, 2026
Thisaigal NewsYouTube
1 பில்லியன் டிஜிட்டல் நிதி: முதற்கட்டமாக 15 அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

1 பில்லியன் டிஜிட்டல் நிதி: முதற்கட்டமாக 15 அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

Share:

பொது சுகாதாரத் துறையின் டிஜிட்டல் வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 1 பில்லியன் ரிங்கிட் நிதியின் முதல் கட்டப் பயனாளிகளாக 15 அரசாங்க மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அறிவிக்கப்பட்ட 650 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து நிதியானது 1 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தமது தேசிய தின உரையில் அறிவித்திருந்தார்.

இதன் மூலம் அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் மின்னணு மருத்துவப் பதிவேடு இஎம்ஆர் முறையை விரைவுபடுத்துவதுடன், இணையம் மற்றும் பொது WiFi வசதிகளும் மேம்படுத்தப்படும் என ஃபாஹ்மி ஃபாடில் தெரிவித்துள்ளார்.

சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்பட்ட இஎம்ார் முன்னோடித் திட்டத்தின் மூலம், நோயாளிகளின் தகவல்களை மருத்துவர்கள் காகித ஆவணங்களைத் தேடாமல் மின்னணு முறையில் உடனடியாகப் பார்க்க முடிவதால் சிகிச்சைக்கான நேரம் மிச்சமாகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு 2,000 சுகாதார நிலையங்களில் மேலும் பல இடங்களுக்கு திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 18 முதல் 30 வயதுக்குட்பட்ட 1 லட்சம் இளைஞர்களுக்கு AI பயன்பாடுகளுக்கான இலவச சந்தா வழங்கும் திட்டத்தின் மேலதிக விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஃபாஹ்மி ஃபாட்சில் விவரித்துள்ளார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து