Sep 12, 2026
Thisaigal NewsYouTube
பறிமுதல் செய்யப்பட்ட பில்லியன் கணக்கான ஊழல் நிதி மீண்டும் மக்களுக்கே: கல்வி, சுகாதாரத்திற்குப் பயன்படுத்தப்படும் என அன்வார் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட பில்லியன் கணக்கான ஊழல் நிதி மீண்டும் மக்களுக்கே: கல்வி, சுகாதாரத்திற்குப் பயன்படுத்தப்படும் என அன்வார் அறிவிப்பு

Share:

முறைகேடான நடவடிக்கைகளில் இருந்து மீட்கப்பட்ட மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட பில்லியன் கணக்கான ரிங்கிட் நிதியானது, மக்களுக்கே திருப்பி வழங்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இந்த நிதி குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற 69-ஆவது தேசிய தின உரையில் அன்வார் இதனை அறிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் செல்வம் மக்களால் அனுபவிக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் கொள்கை எனக் குறிப்பிட்ட அவர், சட்டவிரோத செயல்கள் மூலம் நாட்டின் செல்வத்தை சிலர் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் போல் செயல்பட முயற்சிப்பதை ஏற்க முடியாது என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு நாட்டின் வளர்ச்சியின் பலன்கள் கிடைக்காமல் இருந்தால், “சுதந்திரம் என்பதன் அர்த்தம் என்ன?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், இனம், மதம் என எந்த வேறுபாடுமின்றி ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய கவனமும் ஆதரவும் வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அன்வார், “நமக்கு ஒரே தாயகம் – மலேசியா. இந்த நாட்டை நாம் மரபாகப் பெற்றுள்ளோம்; அதன் வெற்றிக்கு நாம் அனைவரும் பொறுப்பு,” என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்