Jun 16, 2026
Thisaigal NewsYouTube
சர்ச்சைக்குப் பின் நேரில் சந்தித்த அந்தோணி லோக் - ஓன் ஹபீஸ்
தற்போதைய செய்திகள்

சர்ச்சைக்குப் பின் நேரில் சந்தித்த அந்தோணி லோக் - ஓன் ஹபீஸ்

Share:

மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மற்றும் ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹப்பீஸ் காசி ஆகிய இருவரும் சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக நீடித்து வந்த கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, குலாய் இரயில் நிலையத்தில் நடைபெற்ற ஷட்டில் செலாத்தான் சேவைத் தொடக்க விழாவில் இன்று நேரில் சந்தித்துப் பேசினர்.

இந்த அரசியல் விவாதங்களுக்கு மத்தியில், புதிய கேடிஎம் சேவையை ஒன்றாகப் பயணித்து பார்வையிட அந்தோணி லோக் விடுத்த அழைப்பை ஏற்று ஓன் ஹபீஸ் இவ்விழாவில் கலந்துகொண்டார்.

வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலையொட்டி, கூட்டாட்சி அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகள் குறித்து இரு தலைவர்களும் மாறி மாறி கருத்துக்களைப் பகிர்ந்து வந்த நிலையில், இவர்களின் இந்த நேருக்கு நேர் சந்திப்பு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜோகூர் மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள டிஏபி கட்சியுடன் கூட்டு வைக்கப் போவதில்லை என்று ஒன் ஹப்பீஸ் அண்மையில் கூறியிருந்த கருத்துக்கு, கூட்டாட்சி அரசாங்கத்தில் நாம் இணைந்துதான் செயல்படுகிறோம் என்று அந்தோணி லோக் பதிலடி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

98.27 மில்லியன் ரிங்கிட் ஊழல்: இக்ராம் அமைப்பின் முன்னாள் அதிகாரி மீது 158 குற்றச்சாட்டுகள்!

98.27 மில்லியன் ரிங்கிட் ஊழல்: இக்ராம் அமைப்பின் முன்னாள் அதிகாரி மீது 158 குற்றச்சாட்டுகள்!

தங்கச் சங்கிலி கொள்ளை: இருவர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டு!

தங்கச் சங்கிலி கொள்ளை: இருவர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டு!

ராணுவப் பயிற்சியின் போது குண்டு வெடித்து இரு வீரர்கள் பரிதாப உயிரிழப்பு!

ராணுவப் பயிற்சியின் போது குண்டு வெடித்து இரு வீரர்கள் பரிதாப உயிரிழப்பு!

சமூக பாதுகாப்பு கோரிக்கைகள் 200 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு: மேம்பட்ட மறுவாழ்வு சேவைகளின் தேவை அதிகரிப்பு - அமைச்சர் ரமணன்

சமூக பாதுகாப்பு கோரிக்கைகள் 200 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு: மேம்பட்ட மறுவாழ்வு சேவைகளின் தேவை அதிகரிப்பு - அமைச்சர் ரமணன்

எஸ்டிபிஎம் 2025 தேர்வு முடிவுகள் ஜூன் 18-இல் வெளியீடு: முகநூலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எஸ்டிபிஎம் 2025 தேர்வு முடிவுகள் ஜூன் 18-இல் வெளியீடு: முகநூலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பள்ளிகளில் எஸ்பிஆர்எம்-மின் இளம் படைப் பிரிவு திட்டம்: விரைவில் தொடக்கம்

பள்ளிகளில் எஸ்பிஆர்எம்-மின் இளம் படைப் பிரிவு திட்டம்: விரைவில் தொடக்கம்