Sep 7, 2026
Thisaigal NewsYouTube
இஸ்லாமிய நாடும் முஸ்லிம் அல்லாதவர்களுடனான அதன் உறவும்’ கட்டுரை தொடர்பாக  ஹடி அவாங்கிடம் போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

இஸ்லாமிய நாடும் முஸ்லிம் அல்லாதவர்களுடனான அதன் உறவும்’ கட்டுரை தொடர்பாக ஹடி அவாங்கிடம் போலீஸ் விசாரணை

Share:

பாஸ் கட்சித் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹடி அவாங், தமது மிண்டா ப்ரெசிடென் பாஸ் தலையங்கம் தொடர்பாக புக்கிட் அமான் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

“இஸ்லாமிய நாடும் முஸ்லிம் அல்லாதவர்களுடனான அதன் உறவும்” என்ற தலைப்பில் ஹடி அவாங் எழுதிய கட்டுரைக்கு எதிராகப் பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஹடி அவாங் போலீசாரால் விசாரிக்கப்பட்டதை, அவரது அரசியல் செயலாளரும் பாச்சோக் நாடாளுமன்ற உறுப்பினருமான முஹமட் ஷியாஹிர் சுலைமான் உறுதிப்படுத்தியுள்ளார்.

விசாரணைக்கு ஹடி அவாங் முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும், தம்மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால், சட்டப்படி அதனை எதிர்கொள்ள அவர் தயாராக இருப்பதாகவும் சாஹிர் தெரிவித்தார்.

இதனிடையே, மதச்சார்பின்மை கொள்கை மற்றும் இஸ்லாமிய நிர்வாகம் தொடர்பாக ஹடி அவாங் தெரிவித்த கருத்துகள், பாஸ் மற்றும் டி.ஏ.பி தலைவர்களிடையே கடுமையான கருத்து மோதலுக்கு வழிவகுத்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பான போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

இஸ்லாமிய நாடும் முஸ்லிம் அல்லாதவர்களுடனான அதன் உறவும்’ கட... | Thisaigal News