Sep 12, 2026
Thisaigal NewsYouTube
ரொம்பினில் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது;  ஆசிரியரும் மகனும் பலி
தற்போதைய செய்திகள்

ரொம்பினில் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது; ஆசிரியரும் மகனும் பலி

Share:

குவாந்தான்–சிரம்பான் சாலையின் 149.9ஆவது கிலோமீட்டரில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில், ஆசிரியையும் அவரது ஆறு வயது மகனும் உயிரிழந்தனர்.

நேற்றிரவு சுமார் 9.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், 46 வயதான கார்ட்டினி ஙதேனன் மற்றும் அவரது மகன் முஹம்மது அகீஃப் முகமது அஸ்மி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஷரிப் ஷாய் ஷரிப் மொண்டோய் தெரிவித்தார்.

குடும்பத்தினர் பயணித்த எம்.பி.வி வாகனம், சாலையில் கிடந்த மரக்கட்டையில் மோதியதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலதுபுற பள்ளத்தில் கவிழ்ந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வாகனத்தை ஓட்டிச் சென்ற 47 வயது கணவர் தலையில் பலத்த காயமடைந்த நிலையில், முவாட்சாம் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம், பிரிவு 41(1)-ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி