Sep 7, 2026
Thisaigal NewsYouTube
வட்டார பதற்றங்களை பேச்சுவார்த்தை மூலம் கையாள வேண்டும் – அன்வார்
தற்போதைய செய்திகள்

வட்டார பதற்றங்களை பேச்சுவார்த்தை மூலம் கையாள வேண்டும் – அன்வார்

Share:

வட்டார அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக, எந்தவொரு பதற்றங்களையும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் கவனமாகக் கையாள வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப் -வுடனான தொலைபேசி உரையாடலின்போது, வட்டாரத்தின் தற்போதைய நிலவரம் மற்றும் ஈரான்–அமெரிக்க உறவுகளின் வளர்ச்சி குறித்து கலந்துரையாடியதாக அன்வார் தெரிவித்தார்.

பதற்றங்களைத் தணிக்க தொடர்ச்சியான பேச்சுவார்த்தை மற்றும் ஈடுபாடு அவசியம் என்பதில் இரு தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளன்ர். மேலும், அனைத்துலக வர்த்தகம் தடையின்றி நடைபெறுவதற்கு ஹோர்முஸ் நீரிணை திறந்தும் பாதுகாப்பாகவும் இருப்பது முக்கியம் என அன்வார் குறிப்பிட்டார்.

இதனிடையே, மலேசியாவுக்கான பாகிஸ்தானின் இறைச்சி ஏற்றுமதியை விரிவுபடுத்துவது உள்ளிட்ட வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து