அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தபோங் ஹாஜி வாரியம் தொடர்பான விவகாரம் குறித்து போலீஸ் ஐந்து விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளது.
புக்கிட் அமான் வர்த்தக குற்றத்தடுப்பு பிரிவு இயக்குநர் ருஸ்டி இசா இதனைத் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு உதவும் வகையில் இதுவரை 127 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
1995ஆம் ஆண்டு தபோங் ஹாஜி சட்டம், 1965ஆம் ஆண்டு நிறுவனச் சட்டம் மற்றும் 2001ஆம் ஆண்டு சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றன.
விசாரணைகள் அனைத்தும் சுயேட்சையாகவும், நேர்மையாகவும், சட்டத்திற்கு உட்பட்டும் நடைபெறுவதை போலீஸ் உறுதி செய்யும் என ருஸ்டி இசா தெரிவித்தார்.








