Sep 12, 2026
Thisaigal NewsYouTube
லம்பீர் தேசியப் பூங்காவில் 31 வயது பெண் மாயமானார்
தற்போதைய செய்திகள்

லம்பீர் தேசியப் பூங்காவில் 31 வயது பெண் மாயமானார்

Share:

சபா, லம்பீர் தேசியப் பூங்காவில் மலையேற்றத்திற்குச் சென்ற 31 வயது பெண் ஒருவர், காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலின்படி, அந்தப் பெண் உட்பட ஆறு பேர் கொண்ட குழு, நேற்று காலை 9 மணியளவில் மலையேற்றத்தைத் தொடங்கிய பின்னர் நண்பகல் 12 மணியளவில் மலையின் உச்சியை அடைந்து, பின்னர் 1 மணியளவில் உச்சியிலிருந்து கீழே இறங்கத் தொடங்கினர்.

கீழே இறங்கும் போது, வெரோனிக் ஜோசப் தனது நண்பர்களை விட வேகமாக முன்னேறி சென்றதாகவும் ஆனால் இலக்கிடப்பட்ட பகுதியில் அவர் இல்லாததை நண்பர்கள் உணர்ந்துள்ளனர்.

இதையடுத்து, நண்பர்கள் அவரைத் தொடர்புகொண்டும், சுற்றுப்புறப் பகுதிகளில் தேடியும் தகவல் கிடைக்காததால், இந்த விவகாரம் லம்பீர் தேசியப் பூங்கா ரேஞ்சர் குழுவிடம் தெரிவிக்கப்பட்டு அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்