Sep 7, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் விண்ணப்பம்; இனி இணையம் வழி விண்ணப்பிக்கலாம்
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் விண்ணப்பம்; இனி இணையம் வழி விண்ணப்பிக்கலாம்

Share:

வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான விண்ணப்ப நடைமுறை, இன்று முதல் முழுமையாக இணையவழிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சு கேசுமா, மத்தியப்படுத்தப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர் நிர்வாக அமைப்பான எஃப்.டபிள்யூ.சி.எம்.எஸ் மூலம் இனி அனைத்து விண்ணப்பங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

இதன் மூலம், முதலாளிகள் அரசு அலுவலகங்களுக்கு நேரில் பலமுறை செல்ல வேண்டிய அவசியம் குறைவதுடன், காத்திருப்பு நேரமும் குறைந்து, விண்ணப்ப நடைமுறை மேலும் ஒழுங்குபடுத்தப்படும் என அமைச்சகம் கூறியுள்ளது

எனினும், இந்த இணையவழி விண்ணப்பம் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான விதிமுறைகளைத் தளர்த்தவில்லை என்றும் கேசுமா தெளிவுபடுத்தியுள்ளது.

முழுமையான விண்ணப்பம் மற்றும் அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டால், பிரிவு 60K-ன் கீழ் ஆரம்ப அனுமதி முதல் நிபந்தனைக்குட்பட்ட ஒப்புதல் கடிதம் வரை 14 நாட்களுக்குள் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவகத் துறைக்காக அறிவிக்கப்பட்ட 15 ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர் ஒதுக்கீடு கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து