கோலாலம்பூர், நவம்பர்.03-
போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக மலேசிய ராப் இசைக் கலைஞரான Namewee கடந்த மாதம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீது போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதை போலீசார் இன்று உறுதிப்படுத்தினர்.
இதனிடையே "Nurse Goddess" என்றும் அழைக்கப்படும் தைவானிய பிரபலம், கோலாலம்பூரில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி, மரணமடைந்த சம்பவத்தில், தன்னை தொடர்புப்படுத்தி வரும் செய்திகளை Namewee பகிரங்கமாக மறுத்துள்ளார்.
41 வயதான Wee Meng Chee என்ற இயற்பெயர் கொண்ட Namewee-ஐ, கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி, தங்கும் விடுதி ஒன்றில் அதிகாரிகள் கைது செய்த போது, அவரிடம் ecstasy என்றழைக்கப்படும் 9 போதை மாத்திரைகளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அதே வேளையில், பரிசோதனையில், Amphetamines, methamphetamine போன்ற கலவையான போதைப் பொருட்களை அவர் பயன்படுத்தியிருந்ததையும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.








