Jul 30, 2026
Thisaigal NewsYouTube
அபாயகரமாக பேருந்தை செலுத்தியதாக ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

அபாயகரமாக பேருந்தை செலுத்தியதாக ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

Share:

ரொம்பின் , ஆகஸ்ட் 02-

கடந்த ஜுன் மாதம் 9 ஆம் தேதி ஜாலான் குவாந்தன் - செகாமட் சாலையின் 126 ஆவது கிலோமீட்டரில் நால்வர் மரணம் / மற்றும் 35 பேர் படுகாயம் அடையும் அளவிற்கு பேருந்தை அபாயகரமாக செலுத்தியதாக பேருந்து ஓட்டுநர் ஒருவர் ரொம்பின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

மலக்கா, மஸ்ஜித் தனா, ஜெராம் தேசிய தொடக்ககப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பபட்ட இந்த விபத்தில் மிக கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியதாக 50 வயது ஜம்ரி பொன் என்ற அந்த பேருந்து ஓட்டுநர், மாஜிஸ்திரேட் மெலோடி வூன் ஸ்ஸே முன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு சிறை மற்றும் 50 ஆயிரம் வெள்ளிக்கு மேற்போகாத அபராதம் விதிக்க வகை செய்யும் 1987 ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் அந்த பேருந்து ஓட்டுநர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதால் அவரை 5 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை