Sep 21, 2026
Thisaigal NewsYouTube
நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு
தற்போதைய செய்திகள்

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

Share:

நாட்டையே உலுக்கிய 'கேங் நிக்கி' பண மோசடிக் கும்பல் மற்றும் அதன் தலைவன் நிக்கி லியாவ் மீதான விசாரணை, தனது முப்பது ஆண்டுகாலப் போலீஸ் வாழ்க்கையில் மிகச் சிக்கலான, மிகப்பெரிய வேட்டையாகும் என்று பணி ஓய்வுபெற்ற முன்னாள் போலீஸ் படைத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ அயூப் கான் மைதீன் பிச்சை தெரிவித்துள்ளார்.

பணி ஓய்வுப்பெறுதற்கு முதல் நாள் அயூப் கான் வெளியிட்ட ' பெந்தாங்கிலிருந்து புக்கிட் அமான் வரை’ புத்தகத்தில் இந்த விவகாரத்தை ஒரு தனி அத்தியாயமாக எழுதி, பல அதிரடிப் பின்னணிகளைப் பகிர்ந்துள்ளார். வெறும் மூன்று ஆன்லைன் மோசடிப் புகார்களில் தொடங்கி, பின்னர் 45 சொகுசு அடுக்குமாடி வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் பல மில்லியன் ரிங்கிட் பணமோசடி கட்டமைப்பை அம்பலப்படுத்தியது வரை பல சுவாரசியமான தகவல்களை அவர் விவரித்துள்ளார்.

சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது முதல், இந்த விவகாரத்தில் 10 போலீஸ் அதிகாரிகள் மற்றும் 2 எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகள் என மொத்தம் 12 அமலாக்கத்துறை அதிகாரிகள் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது வரை, இந்த வழக்கு தனது நேர்மைக்குக் கிடைத்த மிகப்பெரிய சவால் என்றும் அயூப் கான் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நிக்கி லியாவ், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருடன் பிகேஆர் சட்டையில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அயோப் கானின் இந்தப் புத்தகம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. எனினும் லிக்கி லியாவ், பி.கே.ஆர் உறுப்பினர் அல்ல என்று அதன் தலைமைச் செயலாளர் டத்தோ புசியா சல்லே விளக்கம் அளித்து இருந்தார்.

Related News

50 மில்லியன் ரிங்கிட் அபராதம் இன்னும் செலுத்தப்படவில்லை… நஜிப்பின் வீட்டுக் காவல் தாமதம்

50 மில்லியன் ரிங்கிட் அபராதம் இன்னும் செலுத்தப்படவில்லை… நஜிப்பின் வீட்டுக் காவல் தாமதம்

55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மனநலப் பாதிப்புக்கு அதிக ஆபத்தில்

55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மனநலப் பாதிப்புக்கு அதிக ஆபத்தில்

மலேசிய இந்தியர்களின் மனம் கவர்ந்து, நாவுக்கு சுவையூட்டிய காரசாரம்… சிங்கப்பூரிலும் புதிய கிளை

மலேசிய இந்தியர்களின் மனம் கவர்ந்து, நாவுக்கு சுவையூட்டிய காரசாரம்… சிங்கப்பூரிலும் புதிய கிளை

ஜோகூரில் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி அநாகரிகச் செயல்: 3 பேர் கைது!

ஜோகூரில் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி அநாகரிகச் செயல்: 3 பேர் கைது!

ஆதரவு குறையும் போது இனவாத அரசியலைக் கையில் எடுக்க வேண்டாம்: அரசியல் கட்சிகளுக்கு அன்வார் வலியுறுத்து

ஆதரவு குறையும் போது இனவாத அரசியலைக் கையில் எடுக்க வேண்டாம்: அரசியல் கட்சிகளுக்கு அன்வார் வலியுறுத்து

மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக விக்னேஸ்வரன் மீது கொலைக் குற்றச்சாட்டு

மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக விக்னேஸ்வரன் மீது கொலைக் குற்றச்சாட்டு