Sep 21, 2026
Thisaigal NewsYouTube
மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக விக்னேஸ்வரன் மீது கொலைக் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக விக்னேஸ்வரன் மீது கொலைக் குற்றச்சாட்டு

Share:

கெடா மாநிலம், கூலிமில், தனது மனைவியை 13 முறை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் தொழில்நுட்பவியலாளர் விக்னேஸ்வரன் மீது, கூலிம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

43 வயதான G. விக்னேஸ்வரன், நீதிபதி நூர் ஹமிசா மாட் ஷா முன்னிலையில், குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, அதனைப் புரிந்து கொண்டதாகத் தலையசைத்தார்.

எனினும், இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்பதால், அவரிடம் இருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றச்சாட்டின்படி, ஓர் ஆண் குழந்தையின் தந்தையான விக்னேஸ்வரன், கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 9.04 மணி வரை, கூலிம் மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில், தனது மனைவியான 39 வயதான S. ஷீலாவைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டானது நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ விதிக்கப்படலாம்.

Related News

ஜோகூரில் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி அநாகரிகச் செயல்: 3 பேர் கைது!

ஜோகூரில் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி அநாகரிகச் செயல்: 3 பேர் கைது!

ஆதரவு குறையும் போது இனவாத அரசியலைக் கையில் எடுக்க வேண்டாம்: அரசியல் கட்சிகளுக்கு அன்வார் வலியுறுத்து

ஆதரவு குறையும் போது இனவாத அரசியலைக் கையில் எடுக்க வேண்டாம்: அரசியல் கட்சிகளுக்கு அன்வார் வலியுறுத்து

நஜிப்புக்கு ஆதரவு தெரிவித்து வெளிநாடுகளில் இருந்தும் உதவ முன்வருகின்றனர் – ரோஸ்மா நெகிழ்ச்சி

நஜிப்புக்கு ஆதரவு தெரிவித்து வெளிநாடுகளில் இருந்தும் உதவ முன்வருகின்றனர் – ரோஸ்மா நெகிழ்ச்சி

கோலாலம்பூரில் திடீர் வெள்ளம்: கார்களில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்பு

கோலாலம்பூரில் திடீர் வெள்ளம்: கார்களில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச்சூடு மரண விசாரணையில் தாமதம் ஏன்? - கெப்போங் எம்.பி கேள்வி

டுரியான் துங்கால் துப்பாக்கிச்சூடு மரண விசாரணையில் தாமதம் ஏன்? - கெப்போங் எம்.பி கேள்வி

6,000 இந்திய தொழில்முனைவோருக்கு 140 மில்லியன் ரிங்கிட் முத்ரா நிதி வழங்கல் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

6,000 இந்திய தொழில்முனைவோருக்கு 140 மில்லியன் ரிங்கிட் முத்ரா நிதி வழங்கல் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு