Sep 21, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய இந்தியர்களின் மனம் கவர்ந்து, நாவுக்கு சுவையூட்டிய காரசாரம்… சிங்கப்பூரிலும் புதிய கிளை
தற்போதைய செய்திகள்

மலேசிய இந்தியர்களின் மனம் கவர்ந்து, நாவுக்கு சுவையூட்டிய காரசாரம்… சிங்கப்பூரிலும் புதிய கிளை

Share:

மலேசியாவின் பல மாநிலங்களில் கிளைகளை அமைத்து, இந்தியர்களின் மனம் கவர்ந்ததுடன், பாரம்பரிய உணவுகளின் சுவையால் நாவுக்கு விருந்தளித்து வரும் காரசாரம் உணவகம், தனது சுவைப் பயணத்தை இப்போது சிங்கப்பூருக்கும் விரிவுபடுத்தியுள்ளது. சிங்கப்பூரின் புகழ்பெற்ற லிட்டில் இந்தியாவில், தனது முதல் கிளை உணவகத்தைத் திறந்து புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது காரசாரம்.

சிங்கப்பூரில் நடைபெற்ற காரசாரம் உணவகத்தின் கிளை திறப்பு விழாவில், மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் சிறப்புப் பிரமுகராகக் கலந்து கொண்டு உணவகத்தை ரிப்பன் வெட்டி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

காரசாரம் உணவகத்தின் தோற்றுநர் ஸ்ரீ தரன் மற்றும் சிங்கப்பூர் காரசாரம் உணவகத்தின் உரிமையாளர்களான கமாருட் மற்றும் ஜும்மா கான் ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

காரில் வந்து இறங்கிய டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணனை, காரசாரம் உணவகத்தின் தோற்றுநர் ஸ்ரீதரன் மற்றும் உணவகப் பொறுப்பாளர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

தொடர்ந்து, ஸ்ரீதரன் டத்தோ ஸ்ரீ சரவணனுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி சிறப்பான வரவேற்பை வழங்கினார்.

அதன் பின்னர் டத்தோ ஸ்ரீ சரவணன் ரிப்பன் வெட்டி காரசாரம் உணவகத்தின் சிங்கப்பூர் கிளையைத் திறந்து வைத்தார்.

சிங்கப்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உணவகத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து உணவகப் பொறுப்பாளர்களிடம் டத்தோ ஸ்ரீ சரவணன் கேட்டறிந்தார்.

அவருக்கு காரசாரம் உணவகத்தின் சார்பில் சுவையான உணவுகள் பரிமாறப்பட்டன.

நிகழ்ச்சியில் உரையாற்றிய டத்தோ ஸ்ரீ சரவணன், நமது பாரம்பரிய உணவுகளின் காரசாரம், நாவுக்கு தரும் தனித்துவமான சுவையை அனுபவிக்க, சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள காரசாரம் உணவகத்திற்கு வருகை தர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

நிகழ்ச்சியின் நிறைவாக, டத்தோ ஸ்ரீ சரவணன் உணவகத்தின் உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் இணைந்து குழுப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்தியர்களின் உணவு ரசனையில் தனக்கென இடம் பிடித்துள்ள காரசாரம் உணவகம், அடுத்து, மலேசியாவில் சுபாங் 2 என்ற சுங்கை பூலோவில் தனது புதிய கிளை உணவகத்தைத் திறக்கவிருக்கிறது. 

Related News

ஜோகூரில் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி அநாகரிகச் செயல்: 3 பேர் கைது!

ஜோகூரில் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி அநாகரிகச் செயல்: 3 பேர் கைது!

ஆதரவு குறையும் போது இனவாத அரசியலைக் கையில் எடுக்க வேண்டாம்: அரசியல் கட்சிகளுக்கு அன்வார் வலியுறுத்து

ஆதரவு குறையும் போது இனவாத அரசியலைக் கையில் எடுக்க வேண்டாம்: அரசியல் கட்சிகளுக்கு அன்வார் வலியுறுத்து

மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக விக்னேஸ்வரன் மீது கொலைக் குற்றச்சாட்டு

மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக விக்னேஸ்வரன் மீது கொலைக் குற்றச்சாட்டு

நஜிப்புக்கு ஆதரவு தெரிவித்து வெளிநாடுகளில் இருந்தும் உதவ முன்வருகின்றனர் – ரோஸ்மா நெகிழ்ச்சி

நஜிப்புக்கு ஆதரவு தெரிவித்து வெளிநாடுகளில் இருந்தும் உதவ முன்வருகின்றனர் – ரோஸ்மா நெகிழ்ச்சி

கோலாலம்பூரில் திடீர் வெள்ளம்: கார்களில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்பு

கோலாலம்பூரில் திடீர் வெள்ளம்: கார்களில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச்சூடு மரண விசாரணையில் தாமதம் ஏன்? - கெப்போங் எம்.பி கேள்வி

டுரியான் துங்கால் துப்பாக்கிச்சூடு மரண விசாரணையில் தாமதம் ஏன்? - கெப்போங் எம்.பி கேள்வி

மலேசிய இந்தியர்களின் மனம் கவர்ந்து, நாவுக்கு சுவையூட்டிய ... | Thisaigal News