Sep 21, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி அநாகரிகச் செயல்: 3 பேர் கைது!
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி அநாகரிகச் செயல்: 3 பேர் கைது!

Share:

ஜோகூர் பாருவில் உள்ள ஈஸ்டர்ன் டிஸ்பெர்சல் இணைப்பு நெடுஞ்சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்ததாக கூறப்படும் 3 ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

28 முதல் 36 வயதுக்குட்பட்ட அந்த 3 பேரும், சிறுநீர் கழிக்கும் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, நேற்று இரவு உணவகம் ஒன்றில் மூவரும் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட துணை போலீஸ் தலைவர் ங் ஸ்வீ சாயிட் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பல்நோக்கு வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு ஏற்கனவே குற்றப் பின்னணி இருப்பதாகவும், எனினும் 3 பேரிடமும் நடத்தப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில் எவ்வித தடயமும் இல்லை என்றும் ங் ஸ்வீ சாயிட் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கானது குற்றவியல் சட்டம் பிரிவு 377D-ன் கீழ் அநாகரிகச் செயல் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகின்றது.

Related News

ஆதரவு குறையும் போது இனவாத அரசியலைக் கையில் எடுக்க வேண்டாம்: அரசியல் கட்சிகளுக்கு அன்வார் வலியுறுத்து

ஆதரவு குறையும் போது இனவாத அரசியலைக் கையில் எடுக்க வேண்டாம்: அரசியல் கட்சிகளுக்கு அன்வார் வலியுறுத்து

மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக விக்னேஸ்வரன் மீது கொலைக் குற்றச்சாட்டு

மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக விக்னேஸ்வரன் மீது கொலைக் குற்றச்சாட்டு

நஜிப்புக்கு ஆதரவு தெரிவித்து வெளிநாடுகளில் இருந்தும் உதவ முன்வருகின்றனர் – ரோஸ்மா நெகிழ்ச்சி

நஜிப்புக்கு ஆதரவு தெரிவித்து வெளிநாடுகளில் இருந்தும் உதவ முன்வருகின்றனர் – ரோஸ்மா நெகிழ்ச்சி

கோலாலம்பூரில் திடீர் வெள்ளம்: கார்களில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்பு

கோலாலம்பூரில் திடீர் வெள்ளம்: கார்களில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச்சூடு மரண விசாரணையில் தாமதம் ஏன்? - கெப்போங் எம்.பி கேள்வி

டுரியான் துங்கால் துப்பாக்கிச்சூடு மரண விசாரணையில் தாமதம் ஏன்? - கெப்போங் எம்.பி கேள்வி

6,000 இந்திய தொழில்முனைவோருக்கு 140 மில்லியன் ரிங்கிட் முத்ரா நிதி வழங்கல் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

6,000 இந்திய தொழில்முனைவோருக்கு 140 மில்லியன் ரிங்கிட் முத்ரா நிதி வழங்கல் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

ஜோகூரில் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி அநாகரிகச் செயல்: 3 ... | Thisaigal News