Sep 21, 2026
Thisaigal NewsYouTube
ஆதரவு குறையும் போது இனவாத அரசியலைக் கையில் எடுக்க வேண்டாம்: அரசியல் கட்சிகளுக்கு அன்வார் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

ஆதரவு குறையும் போது இனவாத அரசியலைக் கையில் எடுக்க வேண்டாம்: அரசியல் கட்சிகளுக்கு அன்வார் வலியுறுத்து

Share:

பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதற்காக அரசியல் கட்சிகள் இனவாத அரசியலைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மலாக்கா, கோத்தா ஷாபண்டாரில் இன்று நடைபெற்ற 41-ஆவது மலேசியா சீனர் கலாச்சார நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றிய அன்வார், அரசியல் சூழல் சிக்கலாகி, கட்சிகளுக்கு ஆதரவு குறையும் நேரங்களில், இனவாத உணர்வுகளைத் தூண்டும் அரசியலை சில கட்சிகள் கையில் எடுப்பதாகக் குற்றம் சாட்டினார்.

அதேவேளையில் மலேசியா சுதந்திரம் பெற்று 69 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இனப் பிரச்சினைகள் இனியும் நாட்டில் எந்தவொரு சமூகத்திற்கும் முதன்மையான கவலையாக இருக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்தைய 1940 மற்றும் 1950-களில் ஒவ்வொரு இனத்தினரும் தங்களது எதிர்காலம் குறித்து கவலைப்பட்டதை புரிந்து கொள்ள முடிகிறது என்றும், அதேவேளையில் 1960-களில் மலேசியா புதிய நாடாக இருந்ததால் இது போன்ற அச்சங்கள் நிலவியதையும் அன்வார் சுட்டிக் காட்டினார்.

ஆனால், தற்போது மலேசியா தனது 70-ஆவது சுதந்திர ஆண்டை நெருங்கி வரும் நிலையில், அனைத்து இன மக்களின் கூட்டு வலிமையுடன் முன்னேற வேண்டிய நேரம் இது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், மக்கள் யாருக்கு ஆட்சி செய்யும் அதிகாரத்தை வழங்குகிறார்களோ, அவர்கள் மக்களைப் பாதுகாப்பது, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை பாதுகாப்பது ஆகியவற்றை ஒரே தேசமாக தங்களது பொறுப்பாக ஏற்க வேண்டும் என்றும் அன்வார் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான அரசின் நிலைப்பாட்டையும் மீண்டும் தெளிவுபடுத்திய அன்வார், தனது அரசாங்கம் ஊழல் விவகாரத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்காது என்றும், நாட்டில் இருந்து ஊழலை ஒழிக்க தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அன்வார் உறுதியளித்தார்.

Related News

ஜோகூரில் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி அநாகரிகச் செயல்: 3 பேர் கைது!

ஜோகூரில் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி அநாகரிகச் செயல்: 3 பேர் கைது!

மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக விக்னேஸ்வரன் மீது கொலைக் குற்றச்சாட்டு

மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக விக்னேஸ்வரன் மீது கொலைக் குற்றச்சாட்டு

நஜிப்புக்கு ஆதரவு தெரிவித்து வெளிநாடுகளில் இருந்தும் உதவ முன்வருகின்றனர் – ரோஸ்மா நெகிழ்ச்சி

நஜிப்புக்கு ஆதரவு தெரிவித்து வெளிநாடுகளில் இருந்தும் உதவ முன்வருகின்றனர் – ரோஸ்மா நெகிழ்ச்சி

கோலாலம்பூரில் திடீர் வெள்ளம்: கார்களில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்பு

கோலாலம்பூரில் திடீர் வெள்ளம்: கார்களில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச்சூடு மரண விசாரணையில் தாமதம் ஏன்? - கெப்போங் எம்.பி கேள்வி

டுரியான் துங்கால் துப்பாக்கிச்சூடு மரண விசாரணையில் தாமதம் ஏன்? - கெப்போங் எம்.பி கேள்வி

6,000 இந்திய தொழில்முனைவோருக்கு 140 மில்லியன் ரிங்கிட் முத்ரா நிதி வழங்கல் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

6,000 இந்திய தொழில்முனைவோருக்கு 140 மில்லியன் ரிங்கிட் முத்ரா நிதி வழங்கல் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு