Sep 21, 2026
Thisaigal NewsYouTube
50 மில்லியன் ரிங்கிட் அபராதம் இன்னும் செலுத்தப்படவில்லை… நஜிப்பின் வீட்டுக் காவல் தாமதம்
தற்போதைய செய்திகள்

50 மில்லியன் ரிங்கிட் அபராதம் இன்னும் செலுத்தப்படவில்லை… நஜிப்பின் வீட்டுக் காவல் தாமதம்

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரஸாக்கிற்கு விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் இதுவரை செலுத்தப்படாததால், அவரது வீட்டுக் காவல் நடைமுறை இன்னும் தொடங்கவில்லை.

அபராதத் தொகையை கோலாலம்பூர் உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்று சட்டத்துறை தலைமை வழக்கறிஞர் டான் ஸ்ரீ முகமட் டுசுக்கி மொக்தார் தெரிவித்துள்ளார்.

அபராதம் செலுத்தப்பட்ட பின்னர், நஜிப்பை எப்போது வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியும் என்பதைத் துல்லியமாகக் கூற முடியாது என்றும், அதற்கான நடைமுறைகள் சிறிது காலம் எடுக்கலாம் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, வீட்டுக் காவலை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்பாட்டு விதிமுறைகளை சிறைத்துறை வெளியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நஜிப், கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட நிபந்தனை மன்னிப்பின் அடிப்படையில், 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை எஞ்சிய தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்துவது உட்பட விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும்.

Related News

55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மனநலப் பாதிப்புக்கு அதிக ஆபத்தில்

55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மனநலப் பாதிப்புக்கு அதிக ஆபத்தில்

மலேசிய இந்தியர்களின் மனம் கவர்ந்து, நாவுக்கு சுவையூட்டிய காரசாரம்… சிங்கப்பூரிலும் புதிய கிளை

மலேசிய இந்தியர்களின் மனம் கவர்ந்து, நாவுக்கு சுவையூட்டிய காரசாரம்… சிங்கப்பூரிலும் புதிய கிளை

ஜோகூரில் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி அநாகரிகச் செயல்: 3 பேர் கைது!

ஜோகூரில் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி அநாகரிகச் செயல்: 3 பேர் கைது!

ஆதரவு குறையும் போது இனவாத அரசியலைக் கையில் எடுக்க வேண்டாம்: அரசியல் கட்சிகளுக்கு அன்வார் வலியுறுத்து

ஆதரவு குறையும் போது இனவாத அரசியலைக் கையில் எடுக்க வேண்டாம்: அரசியல் கட்சிகளுக்கு அன்வார் வலியுறுத்து

மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக விக்னேஸ்வரன் மீது கொலைக் குற்றச்சாட்டு

மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக விக்னேஸ்வரன் மீது கொலைக் குற்றச்சாட்டு

நஜிப்புக்கு ஆதரவு தெரிவித்து வெளிநாடுகளில் இருந்தும் உதவ முன்வருகின்றனர் – ரோஸ்மா நெகிழ்ச்சி

நஜிப்புக்கு ஆதரவு தெரிவித்து வெளிநாடுகளில் இருந்தும் உதவ முன்வருகின்றனர் – ரோஸ்மா நெகிழ்ச்சி