Sep 12, 2026
Thisaigal NewsYouTube
பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு
தற்போதைய செய்திகள்

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

Share:

நிர்வாகச் முறைகேடு மற்றும் பேராசையால் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்த 'தாபோங் ஹாஜி' விவகாரம் தொடர்பாக, வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு கூட்டப்பட்டு அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இன்று மேபாங்க் நிறுவனத்தின் புதிய தலைமையகக் கட்டடத் தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், கடந்த 2014 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் இந்தத் யாத்ரீகர் நிதி அமைப்பில் நடந்த முதலீட்டு மோசடிகள் மற்றும் கடுமையான நிர்வாகக் குறைபாடுகள் குறித்து இந்த அரச விசாரணை ஆணையம் விரிவாக ஆராய்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

"அதிகாரிகளின் அலட்சியம், பேராசை மற்றும் கட்டுப்பாடற்ற சுயநலப் போக்குகளால் இந்தத் தேசிய நிறுவனம் ஒரு கட்டத்தில் முற்றிலும் அழியும் நிலைக்குச் சென்றது. ஆனால், தற்போதைய கடுமையான சீர்திருத்தங்கள் மூலம் அது மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுச் சரியானப் பாதைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது" என்று பிரதமர் எச்சரித்தார்.

அரசியல் தலையீடுகளைக் கட்டுப்படுத்தவும், தடயவியல் தணிக்கை நடத்தவும் இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ள நிலையில், இந்தச் சிறப்பு நாடாளுமன்ற அமர்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்