Sep 25, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பெசி - உலு கிளாங் விரைவுச் சாலை விபத்து: 30 மீட்டர் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி மரணம்
தற்போதைய செய்திகள்

சுங்கை பெசி - உலு கிளாங் விரைவுச் சாலை விபத்து: 30 மீட்டர் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

Share:

நேற்று பிற்பகல் சுங்கை பெசி-உலு கிள்ளான் விரைவுச்சாலையின் கிலோமீட்டர் 15.8 பகுதியில், எஸ்.யு.வி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய பயங்கர விபத்தில், மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.

விபத்தின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால், உயிரிழந்த மோட்டார் சைக்கிளோட்டி, பாலத்தில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவிற்குத் தூக்கி வீசப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து நேற்று மாலை 4.40 மணியளவில் நிகழ்ந்ததாக, கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை ,அமலாக்கத் துறைத் தலைவர் முகமது ஜம்ஜூரி முகமது ஈசா தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News