Jul 18, 2026
Thisaigal NewsYouTube
பாயான் லெபாசில் 24 -ஆவது மாடியிலிருந்து விழுந்த 5 வயது சிறுவன் பலி
தற்போதைய செய்திகள்

பாயான் லெபாசில் 24 -ஆவது மாடியிலிருந்து விழுந்த 5 வயது சிறுவன் பலி

Share:

பினாங்கின் பாயான் லெப்பாஸ், தெலுக் கும்பார் பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில், 24-வது மாடியில் இருந்து தவறி விழுந்ததாக நம்பப்படும் 5 வயது சிறுவன், பரிதாபமாக உயிரிழந்தான்.

நேற்று இரவு 11.30 மணியளவில், அச்சிறுவன் அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில், குடியிருப்பு வாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவப் பணியாளர்கள், சிறுவனை பரிசோதித்த போது, அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தென்மேற்கு மாவட்ட போலீஸ் தலைவர் உதவி அனுவால் அப் வஹாப் தெரிவித்துள்ளார்.

Related News