Jul 15, 2026
Thisaigal NewsYouTube
வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்: பிரதமர் அன்வார் இரங்கல்.. உலக நாடுகள் மீட்புப் பணிகளுக்கு உதவி
தற்போதைய செய்திகள்

வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்: பிரதமர் அன்வார் இரங்கல்.. உலக நாடுகள் மீட்புப் பணிகளுக்கு உதவி

Share:

வெனிசுலா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தமது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலநடுக்கமானது, கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக வெனிசுலாவை தாக்கிய மிக வலிமையான பேரிடர்களில் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இடிபாடுகளிடையே சிக்கியுள்ள உயிர்களைக் காப்பாற்றுவதற்காக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் வெனிசுலா மீட்புப் படையினரின் துணிச்சல், அர்ப்பணிப்பு மற்றும் மன உறுதியின் மீது மலேசியாவுக்கு முழு நம்பிக்கை இருப்பதாக அன்வார் தெரிவித்துள்ளார்.

வெனிசுலாவில் நேற்று வியாழக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால், குறைந்தது 188 பேர் உயிரிழந்ததுடன், 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த பேரழிவைத் தொடர்ந்து, உலக நாடுகள் மற்றும் அனைத்துலக அமைப்புகள், வெனிசுலாவுக்கு மீட்புப் பணிகளுக்கான உதவிகளையும், நிவாரணப் பொருட்களையும் அனுப்பி வைத்து, ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Related News