பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகளுக்கு இடையிலான அரசியல் பிளவு, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தேர்தல் வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தந்திரம் என்ற குற்றச்சாட்டை, பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலில், பெர்சத்து கட்சியானது பெரிக்காத்தான் சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதால், இரு கட்சிகளின் தேர்தல் இயந்திரங்களும் தனித்தனியாக செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தாங்களும் பெரிக்காத்தான் சின்னத்திலேயே போட்டியிட உறுதியாக இருப்பதாகவும், பெர்சாத்துவின் முடிவு குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று ஹாடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அது அவர்களின் தேர்தல் உத்தியாகவும் இருக்கலாம் என்றும் அவர் விவரித்துள்ளார்.








