மலேசியாவில் தற்போதுள்ள இரட்டை 5G தொலைத்தொடர்பு கட்டமைப்புக் கொள்கை தொடர்ந்து அமலில் இருக்கும் எனத் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொள்கை, பயனர்கள் தங்களுக்குப் பிடித்த தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களைத் தேர்வு செய்யும் சுதந்திரத்தை வழங்குவதுடன், ஒரு வலையமைப்பில் தடங்கல் ஏற்பட்டால் மற்றொன்றை மாற்றாகப் பயன்படுத்தவும் வழிவகுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், சேவைத் தடங்கல் ஏற்படும் சூழலில் பயனர்கள் மாற்று வலையமைப்பு மூலம் தொடர்ந்து சேவைகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் குறித்து இரு நிறுவனங்களும் கலந்துரையாடுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போது டிஜிட்டல் நேஷனல் பெர்ஹாட் நிறுவனம் எரிக்சன் தொழில்நுட்பத்தையும், யு மோபைல் நிறுவனம் ஹுவாவேய் மற்றும் ZTE தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி வருகின்றன.








