Nov 25, 2026
Thisaigal NewsYouTube

சுகாதார அமைச்சின் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 85 விழுக்காடு சேதம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுகாதார அமைச்சின் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 85 விழுக்காடு சேதம்

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் செனாவாங் தெற்கு நோக்கிய ஓய்வுப் பகுதியில் சுகாதார அமைச்சின் பேருந்து தீப்பற்றி எரிந்ததில், அதிலிருந்த 13 சுகாதார அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர் என அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இச்சம்பவம் இன்று நண்பகல் 12 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

தகவல் கிடைத்ததும் நண்பகல் 12.16 மணிக்கு சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், 12.20 மணிக்கு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் பிற்பகல் 1.19 மணிக்கு தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

இந்தத் தீ விபத்தில் பேருந்து 85 விழுக்காடு எரிந்து சேதமடைந்ததாக நெகிரி செம்பிலான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →