Nov 25, 2026
Thisaigal NewsYouTube

தேசிய இலக்கிய மேதை எ. சமாட் சைட் மறைவு: கொள்கைப் பிடிப்பையும் இலக்கியப் பற்றையும் நினைவுகூர்ந்த அன்வார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தேசிய இலக்கிய மேதை எ. சமாட் சைட் மறைவு: கொள்கைப் பிடிப்பையும் இலக்கியப் பற்றையும் நினைவுகூர்ந்த அன்வார்

மறைந்த தேசிய இலக்கிய விருது பெற்ற டத்தோ ஶ்ரீ எ. சமாட் சைட் அவர்களின் கொள்கைப் பிடிப்பும், மொழி மற்றும் இலக்கியத்தின் மீதான ஆழ்ந்த பற்றும் என்றும் நினைவில் நிலைத்திருக்கும் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புகழாஞ்சலி சூட்டினார்.

கவிதை மற்றும் இலக்கியத்தின் வலிமையால் துணிச்சலும் கண்ணியமும் கொண்ட ஒரு தேசத்தை உருவாக்க முடியும் என்பதை அவர் தமக்குக் கற்றுத் தந்ததாக அன்வார் நினைவுகூர்ந்தார்.

மெர்டேக்கா விளையாட்டரங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில், எ. சமாட் சைட் தனது 'டி அத்தாஸ் பாடாங் செஜாரா’ கவிதையை வாசித்த தருணத்தையும் அவர் நினைவுகூர்ந்தார்.

மக்களின் குரல்கள் ஒடுக்கப்பட்ட காலகட்டத்தில், கவிதையின் வழியாக அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் எ. சமாட் சைட் என்றும் அன்வார் புகழாரம் சூட்டினார்.

85 வயதான எ. சமாட் சைட், முதுமை மற்றும் நீரிழிவு நோய்க்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணிக்கு கோலாலம்பூர் மருத்துவமனையில் காலமானார்.

அவரது உடல் இன்று காலை 10.55 மணிக்கு புக்கிட் கியாரா முஸ்லிம் மையத்துக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →