Nov 25, 2026
Thisaigal NewsYouTube

ஷா ஆலம் வெள்ளத் தடுப்பு: 7.5 லட்சம் ரிங்கிட் அவசரத் திட்டங்கள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஷா ஆலம் வெள்ளத் தடுப்பு: 7.5 லட்சம் ரிங்கிட் அவசரத் திட்டங்கள்

சிலாங்கூர், ஷா ஆலம் பகுதியில் வெள்ளப் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த மூன்று உடனடி தடுப்பு நடவடிக்கைகளை நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக மொத்தம் 7 லட்சத்து 49 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்குள் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாமான் ரஷ்னா பகுதியில் வெள்ளத் தடுப்புச் சுவர் மற்றும் நீர்வழிக் கதவு அமைக்க 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், புக்கிட் ராஜா சந்திப்பு அருகே 1 லட்சத்து 99 ஆயிரம் ரிங்கிட்டிலும், தாமான் இந்தான் பகுதியில் 2 லட்சம் ரிங்கிட்டிலும் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், வெள்ளநீரை விரைவாக வெளியேற்ற நான்கு முக்கிய இடங்களில் ஆறு நகரும் நீரேற்று இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

நீண்டகாலத் திட்டமாக, சுங்கை ராசா ஆற்றுப் பகுதியில் நீர்க்கட்டுப்பாட்டு மதகு, நீரேற்று நிலையம் மற்றும் வெள்ளநீர் தேக்கத் தொட்டி அமைக்க 40 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2031ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →