Dec 4, 2025
Thisaigal NewsYouTube
முறையற்ற கடை வீடுகளில் அந்நியத் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டது: தொழிற்சாலைக்கு எதிராக நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

முறையற்ற கடை வீடுகளில் அந்நியத் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டது: தொழிற்சாலைக்கு எதிராக நடவடிக்கை

Share:

சிரம்பான், ஜூலை.26-

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய சுகாதார, பாதுகாப்பு வசதிகள், நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்க இருப்பதை உறுதிச் செய்ய மாநில அரசு அடிக்கடி திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ். வீரப்பன் தெரிவித்தார்.

இவ்வ்விவகாரத்தில் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் தொழிலாளர்களின் நல்வாழ்வை பலப்படுத்த நெகிரி செம்பிலான் அரசாங்கம் தொடர்ந்து உறுதிப் பூண்டுள்ளதாக மாநில தொழில்முனைவோர், மனித வளம், பருவ நிலைமாற்றம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் ஆட்சிக்குழு உறுப்பினரான வீரப்பன் குறிப்பிட்டார்.

கடந்த ஜுலை 24 ஆம் தேதி சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபார் தொழிற்பேட்டைப் பகுதியில் செயல்படும் ஒரு தொழிற்சாலையில் ஓப்ஸ் பெசி எனும் சோதனை நடவடிக்கைக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் வீரப்பன் தெரிவித்தார்.

அந்தச் சோதனை நடவடிக்கைகளில் பல்வேறு அரசாங்க ஏஜென்சிகளின் 41 அமலாக்க அதிகாரிகளுக்கு வீரப்பன் தலைமையேற்றார்.

கியோகினி மலேசியா செண்டிரியான் பெர்ஹாட் என்ற அந்த நிறுவனம், இரண்டு ஜப்பானியர்களை இயக்குநர்களாகக் கொண்டுள்ளது. உள்ளூர் மற்றும் ஜப்பானிய உற்பத்தியைச் சார்ந்த "வைப்பர்" போன்ற கார் உதிரிப் பாகங்களைத் தயாரிக்கும் நடவடிக்கையில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது என்று வீரப்பன் சுட்டிக் காட்டினார்.

இந்த நிறுவனத்தில் 56 உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் 88 வெளிநாட்டு தொழிலாளர்கள் என 144 ஊழியர்கள் உள்ளனர். தொழிற்சாலைக்கு வெளியே 3 கடை வீடுகளில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனைவரையும் தங்க வைக்கப்பட்ட இடம், நிறுவன இயக்குநரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சான்றிதழ் இல்லை என்பது நெகிரி செம்பிலான் ஆள்பல இலாகாவின் சோதனையில் தெரிய வந்துள்ளதாக வீரப்பன் குறிப்பிட்டார்.

தங்குமிடச் சான்றிதழை முதலாளி பெறத் தவறியதற்காகச் சட்டம் 446 இன் பிரிவு 24D இன் கீழ் ஒரு விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் அந்த தொழிற்சாலையில் பொருட்களைத் தூக்குவதற்குப் பயன்படுத்தப்படும் இயந்திரத்தின் செல்லத்தக்க சான்றிதழ் கடந்த ஜனவரி 8 ஆம் தேதியுடன் காலாவதியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வீரப்பன் தெரிவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை அந்த நிறுவனம் பூர்த்தி செய்யவில்லை. எனவே குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 5 லட்சம் ரிங்கிட் அபராதம் மற்றும் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் அதன் உரிமையாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வீரப்பன் குறிப்பிட்டார்.

Related News